search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளீனர் பலி"

    • கன்னியாகுமரி-நெல்லை நான்கு வழிச்சாலையில் மினி பஸ்சில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.
    • கிருஷ்ணன் உடலை பணகுடி போலீசார் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பணகுடி:

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து சுமார் 35 அய்யப்ப பக்தர்கள் மினிபஸ் மூலமாக சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திருவனந்தபுரம் வழியாக ஊருக்கு திரும்பினர்.

    கன்னியாகுமரி-நெல்லை நான்கு வழிச்சாலையில் மினி பஸ்சில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது பணகுடி அருகே நான்கு வழிச்சாலையில் வந்தபோது, அதில் பயணம் செய்து கொண்டிருந்த கிளீனரான திருப்பதியை சேர்ந்த கிருஷ்ணா (வயது 52) என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    உடனடியாக பஸ்சில் பயணித்தவர்கள், கிருஷ்ணாவை மீட்டு பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து கிருஷ்ணன் உடலை பணகுடி போலீசார் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்திரன் (வயது 27). இவர் லாரி கிளீனராக வேலை செய்து வந்தார். இவரது வீட்டில் மின்சார சுவற்றில் இருந்த எர்த் கம்பியில் அவரது கைப்பட்டது..இதில் எர்த் கம்பியில் இருந்து வந்த மின்சாரம் தாக்கி இவர் தூக்கி வீசப்பட்டார்.
    • பரிசோதித்த டாக்டர்கள், சந்திரன் இறந்து விட்டதாக கூறினார்.

    கடலூர்:

    பண்ருட்டி எல்.என்.புரம் குயவர் வீதியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் சந்திரன் (வயது 27). இவர் லாரி கிளீனராக வேலை செய்து வந்தார். இவரது வீட்டில் மின்சார கோளாறு உள்ளது. இதனால் வீட்டில் உள்ள எர்த் கம்பியில் ஒரு சில நேரங்களில் மின்சாரம் வரும். இந்நிலையில் லாரி கிளினரான சந்திரன் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தனது வீட்டில் கழிவறைக்கு சென்றார். அப்போது சுவற்றில் இருந்த எர்த் கம்பியில் அவரது கைப்பட்டது. 

     இதில் எர்த் கம்பியில் இருந்து வந்த மின்சாரம் தாக்கி இவர் தூக்கி வீசப்பட்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சந்திரன் இறந்து விட்டதாக கூறினார். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்தனர். மின்சாரம் தாக்கி பலியான கிளினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×